ஆவடி ராணுவ படை வளாகத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு குண்டு துளைக்காத 10 வாகனங்கள் அனுப்பப்பட்டது: முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது

 

சென்னை: ஆவடி ராணுவ படை வளாகத்தில் இருந்து சிறப்பு இலகு ரக 10 வாகனங்கள் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில், தனியார் நிறுவனத்தால், ராணுவ பணிகளுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறப்பு 35 இலகு ரக குண்டு துளைக்காத வாகனம், ஆவடி ராணுவ படை வளாகத்திற்கு சில மாதங்களுக்கு முன் வந்தது. மீண்டும், இந்த இலகு ரக சிறப்பு கவச வாகனம் ஆவடியில் இருந்து காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிறைந்த பிரச்னைக்குரிய பகுதிகளுக்கு ராணுவ வீரர்கள் விரைவாக செல்வதற்காகவும், ஆபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்றவும் இலகு ரக சிறப்பு வாகனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை பராமரிப்பது மிகவும் எளிதாகவும், விரைவாக சரி செய்து கழற்றி மாற்றவும் முடியும். குண்டுகள் துளைக்காததாகவும், குண்டும், குழியும் உள்ள கடுமையான பாதைகளில் வேகமாக செல்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை முதல் முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டதாகும். இதில், மொத்தம் 35 வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்கட்டமாக கனரக வாகனம் மூலம் 10 வாகனங்கள் ஆவடியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது. மேலும் சில தினங்களில் மீதி உள்ள வாகனமும் அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

The post ஆவடி ராணுவ படை வளாகத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு குண்டு துளைக்காத 10 வாகனங்கள் அனுப்பப்பட்டது: முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: