நன்றி குங்குமம் டாக்டர்
நாம் தினந்தோறும் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்கின்றதா என பார்க்கின்றோம் அனால் அதை எப்படி சாப்பிடவேண்டும் எவ்வளவு சாப்பிடவேண்டும் என்ற அளவை மறந்துவிடுகின்றோம். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அளவோடு சாப்படுவதும் முக்கியம். இதனால்தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் சிலவற்றைப் பார்ப்போம்:அளவுக்கு அதிகமாக சிவப்பு மிளகாயைப் பயன்படுத்தினால் இரைப்பைப் புண் அதிகரிக்கும்.
அதிகமாக காபி குடிப்பவர்களுக்கு இதய நோய், நடுக்கம் மற்றும் பயம் ஏற்படலாம். மேலும், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். சில நேரங்களில் அது மிக தீவிரமாக சென்று இதயத்துடிப்பை நிறுத்திவிடவும் கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதிகமாக உண்ணப்படும் கத்தரிக்காய் தோல்நோய் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும்.
பூண்டை அதிக அளவில் சமையலில் சேர்த்தால் சிலருக்கு ஒவ்வாமையைத் தூண்டி விடலாம். இஞ்சியை அதிக அளவில் உண்டு வந்தால் உணவுக்குழாய் புண் உருவாகும் வாய்ப்பு உண்டு. அதிகமாக சேர்க்கப்படும் தேன் குடலில் உயிர் கொல்லும் நச்சுப்பொருளை உருவாக்கும்.
அதிகமாகப் பால் அருந்தினால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயநோய் உண்டாகலாம்.அதிகமாக பட்டாணியை உணவில் சேர்த்துக்கொண்டால் கருத்தடை
ஏற்படலாம். உருளைக்கிழங்கு அதிகம் உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும். எனவே அளவாக உண்ண வேண்டும்.அளவுக்கு அதிகமாக கேரட் சேர்த்துக் கொண்டால் தோல் மஞ்சள் நிறமாக மாறக்கூடும். அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் பழக்கமும் ஆபத்துதான்.
தண்ணீர் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் தண்ணீர் குடிப்பதிலும் அளவுகள் இருக்கின்றது. கம்மியான அளவில் தண்ணீர் குடித்தாலும், அதிகமான அளவில் தண்ணீர் குடித்தாலும் பிரச்னைதான். எனவே, ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம், ஆனால் தண்ணீர் அளவு 6 லிட்டர் மேல் தாண்டினால் அது உடலுக்கு விஷமாக மாறிவிடும்.
அதிக அளவில் சாப்பிடப்படும் உப்பும் ஆபத்தை விளைவிக்கும். எனவே, சாப்பிடும் உணவில் தேவைக்கு குறைவாகவே உப்பை பயன்படுத்துவது நல்லது. உப்பை உணவில் அதிகம் பயன்படுத்தினால் அது இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.
தொகுப்பு: நெ. இராமகிருஷ்ணன்
The post அளவுக்கு மிஞ்சினால்… # appeared first on Dinakaran.