நாடாளுமன்ற தேர்தல்: சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை..!!

சென்னை: சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக, அதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் செயலில் இறங்கி இருக்கின்றன. அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 4-வது நாளாக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிவகங்கை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளோடு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை தொடங்கியுள்ளது.

அமைச்சர்கள் கே.என்.நேரு தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொறுப்பு அமைச்சர், மேயர், துணை மேயர் நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். திமுகவை பொறுத்தவரை மொத்தம் தமிழகம், புதுச்சேரியில் இருக்கக்கூடிய 40 தொகுதிகளில் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

ஏற்கனவே கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கோவை, சேலம், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட 8 தொகுதியில் ஆலோசனை முடிந்துள்ள சூழலில் இன்றைய தினம் சிவகங்கை, விருதுநகர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை தென்காசி, திருநெல்வேலி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை, விருதுநகர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது திமுக வேட்பாளர் போட்டியிட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தல்: சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: