மாவட்ட அளவில் மாணவர்கள் தனித்திறன் போட்டி: எம்எல்ஏ பரிசு வழங்கினார்

 

கூடலூர், ஜன. 28: உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா வித்யாலயா மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி மற்றும் இன்டர்நேஷனல் லெஜெண்ட் செஸ் அகாடமி யோகா சேவை மையம் இணைந்து நடத்திய தேனி மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டி கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இந்திரா உதயகுமார், கூடலூர் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சகிலா சுலைமான்,

கம்பம் நகர திமுக (தெற்கு) செயலாளர் பால்பாண்டி ராஜா, நகர்மன்ற உறுப்பினர் சாதிக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். மாணவர்களின் தனித்திறன் போட்டிகளாக ஸ்கேட்டிங், சிலம்பம், யோகா, சதுரங்கம், சுருள்வாள் வீச்சு, அபாகஸ் போட்டி என தனித்தனியாக நடைபெற்றது. இதையடுத்து ராமகிருஷ்ணன் எம்எல்ஏ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை லெஜெண்ட் செஸ் அகாடமி சுரேஷ், யோகா சேவை மையம் ஜெயச்சந்திரன், ஜெயப்பிகாஷ் செய்திருந்தனர்.

The post மாவட்ட அளவில் மாணவர்கள் தனித்திறன் போட்டி: எம்எல்ஏ பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: