பயிர் சேதங்களுக்கு நிவாரணம் தேவை: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

 

கமுதி, ஜன. 28: கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்கர் தெய்வ மணிகண்டன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மைதீன், வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கே.நெடுங்குளம் ஊராட்சி தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

துணைத் தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டங்களில், நெல், மிளகாய், சோளம், பருத்தி போன்ற பயிர்கள் தொடர் மழை காரணமாக மிகுந்த சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று, மேலராமநதியில், ஊராட்சி மன்ற தலைவர் ஞானம்மாள் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பரிசோதனை முறை, குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்து விளக்கம் அளித்தனர். இதேபோல் ஆனையூர், பாக்குவெட்டி உட்பட, இப்பகுதியில் உள்ள ஏராளமான ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

The post பயிர் சேதங்களுக்கு நிவாரணம் தேவை: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: