அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் மருத்துவர் சிவகாமி தகவல் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம்: 23 ஜோடிகள் பங்கேற்பு

 

திருமயம். ஜன.26: திருமயம் அருகே கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈழக்குடிப்பட்டி கிராமத்தில் உய்யவந்தி அய்யனார், உய்யவந்தி கருப்பர், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று காலை 6 மணி அளவில் நடைபெற்றது. பந்தய மானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தூரமானது போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் பந்தய தூரத்தை துரத்தி ஓடி முதல் பரிசை நாட்டரசன் கோட்டை பழனி, 2ம் பரிசு அயிலாங்குடி மலைச்சாமி, 3ம் பரிசு காலக்கண்மாய் வட்டாயுத உடைய ஐயனார், 4ம் பரிசு கொட்டனத்தம்பட்டி வேலுச்சாமி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 23 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதன் பந்தயத்தூரம் போய் வர 5 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பந்தயமானது இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை மேலவளவு பன்னீர்செல்வம் நினைவாக, கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், 2ம் பரிசு ஈழக்குடிப்பட்டி கல்யாணி, சிவபுரிபட்டி மருது, 3ம் பரிசு ஏரியூர் பெத்தாச்சி, துளையானூர் பாஸ்கரன், 4ம் பரிசு கேகே பட்டி பொன்னையா, ஈழக்குடிப்பட்டி கல்யாணி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டியின்போது, சாலை இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை ஈழக்குடிபட்டி அதிமுக பிரமுகர்கள், ஊரார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

The post அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் மருத்துவர் சிவகாமி தகவல் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம்: 23 ஜோடிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: