இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து

ஐதராபாத்: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது முதல் விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரெவ்லி, பெட் டக்கெட்டை தன் சுழலில் ஆட்டமிழக்க செய்தார் அஸ்வின். இடையில் ஒல்லி போப்பை வெளியேற்றினார் ஜடேஜா.தொடர்ந்து 4வது விக்கெட்டுக்கு 61சேர்த்த ஜோ ரூட் 29, ஜானி பேர்ஸ்டோ 37ரன்னிலும் பெவிலியன் திரும்பினார். ஒருப்பக்கம் இங்கிலாந்து வீரர்கள் குறைந்த ரன்னில் அடுத்தடுத்து வெளியேறினாலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கொஞ்சம் அதிரடியாக விளையாடி அரைசதத்தை கடந்தார்.

அணியும் கவுரவமான ஸ்கோரை எட்டியது. அவர் 70(88பந்து, 6பவுண்டரி, 3சிக்சர்) ரன்னில் ஆட்டமிழந்ததும், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 64.3ஓவருக்கு 246ரன்னில் முடிந்தது. இந்திய தரப்பில் சுழல்கள் அஷ்வின், ஜடேஜா தலா 3, அக்சர், வேகம் பும்ரா தலா 2விக்கெட்களை வீழ்த்தினர். அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 80வது ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. கேப்டன் ரோகித் சர்மாவை 24ரன்னில் வெளியேற்றினார் ஜாக் லீச். அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ஓவருக்கு இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119ரன் எடுத்துள்ளது. அரை சதம் விளாசிய யாஷ்வி ஜெய்ஸ்வால் 76(70பந்து, 9பவுண்டரி, 3சிக்சர்), சுப்மன் கில் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா 127ரன் பின்தங்கிய நிலையில் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளது.

 

The post இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து appeared first on Dinakaran.

Related Stories: