போக்குவரத்து காவல்துறைக்கு உதவுவதற்காக, அனைத்து சந்திப்புகள் மற்றும் மாற்றுப்பாதைகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கூடுதல் போக்குவரத்து கண்காணிப்பு பணியாளர்களை (Traffic Marshalls) நியமிக்கவுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒரு வழி போக்குவரத்தை முறையாக அமல்படுத்த அதிக போக்குவரத்து காவலர்களை பணியமர்த்துவதற்காக போக்குவரத்து காவல்துறையுடன் ஒருங்கிணைத்து வருகிறது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மினி பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பெருநகர போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் சேதமடைந்த சாலை சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, சாலைகள் நல்ல நிலையில் உறுதி செய்யப்படும். மேலும், சாலை சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post மெட்ரோ பணிகளால் சேதமடைந்த சாலைகளின் சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.