மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழா தொடங்கியது

ஈரோடு, ஜன. 25: கொல்லம்பாளையம் மாரியம்மன், கோட்டை மாரியம்மன் கோயில்களின் தை மாதப் பொங்கல் விழா நேற்று முன் தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதற்காக மாகாளியம்மன் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து கோயில்களில் பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று (25ம் தேதி) இரவு 9 மணியளவில் கம்பம் நடப்படுகிறது. இதையடுத்து, 29ம் தேதி வரை பொதுமக்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்வர். 30ம் தேதி மாலை, பக்தர்கள் காரை வாய்க்காலுக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். 31ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அன்றைய தினம் இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையடுத்து, பிப்ரவரி 1ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

The post மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழா தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: