டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
சென்னையில் உள்ள கிண்டி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு ஆகும்.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள். கூடுதல் விவரங்களுக்கு, decgc.chennai@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: