குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்

 

கும்மிடிப்பூண்டி: சுண்ணாம்பு குளம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் அன்னதானம் வழங்கினார். கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புளம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட கிராமபுற மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சுமார் 1,200 பேர் மேலகழனி, ஓபசமுத்திரம், மெதிபாளையம், கொக்கு பாளையம், ஆந்திர மாநிலம் இருக்கும், செங்கல் சூளை மேடு, நத்தம், எளாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கண்ட அரசு பள்ளிக்கு சைக்கிள் மற்றும் அரசு பேருந்துகள் பயணம் சென்று படித்து வருகின்றனர். இந்த அரசு பள்ளி மாணவர்கள் வில்வித்தை, சிலம்பம் பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருவது வழக்கம்.

இந்நிலையில், சுண்ணாம்பு குளம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.ரவி மேற்கண்ட அரசு பள்ளிக்கு பல்வேறு கட்டிடம் மற்றும் சிறு உதவிகளை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து, வருகின்ற 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சுண்ணாம்பு குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மூன்று அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று மதிய உணவுவாக பிரியாணியை வழங்கினார். அப்போது தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணர்களை வரிசையில் நின்று ஒவ்வொருவராக வரவைத்து உணவுகளை வழங்கினர். மேலும் இந்த பள்ளிக்கு உதவிகளை செய்ய வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்கு மாணவர்கள் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்து கோரிக்கை வைத்தனர்.

The post குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: