எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் இளைஞர்கள் உற்சாகம் கம்மவான்பேட்டையில் நடந்த

கண்ணமங்கலம், ஜன.25: கம்மவான்பேட்டையில் நேற்று நடந்த எருது விடும் திருவிழாவில் இளைஞர்கள் மத்தியில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை கிராம தேவதை மஞ்சியம்மனுக்கும், சுவாமி பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், பேண்டு வாத்தியங்கள் முழங்க கிராம பெரியவர்களும், இளைஞர்களும் வாடிவாசலை வந்தடைந்தனர். தொடர்ந்து, எருது விடும் திருவிழா தொடங்கியது. அப்போது, எருதுகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய எருதுகளை அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். முடிவில் குறிப்பிட்ட தூரத்தை அதிவிரைவாக கடந்த காளைகளுக்கு முதல் பரிசு ₹80 ஆயிரம், ₹60 ஆயிரம், ₹45 ஆயிரம், ₹35 ஆயிரம், ₹25 ஆயிரம் உட்பட மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான எருதுகள் பங்கேற்றன. மேலும், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்துடன் விழாவை பார்வையிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் இளைஞர்கள் உற்சாகம் கம்மவான்பேட்டையில் நடந்த appeared first on Dinakaran.

Related Stories: