ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விசிக புறக்கணிப்பு

சென்னை: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கின்றன. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை: குடியரசு தினத்தையொட்டி நாளை (26ம் தேதி) ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கின்றோம். கடந்த 2021 செப்டம்பர் 18ம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்துவருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் பேசும் போது, பா.ஜ.வின் பார்வையிலான வரலாற்றை பேசுவதும் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். இதையெல்லாம் கண்டிக்கும் விதமாக தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம். இதேபோல் ஆளுநரின் குடியரசு தின விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

The post ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விசிக புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: