அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

சென்னை: பாஜ அணியில் இருந்து விலகி அதிமுக தனித்து விடப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் விரைவில் புதிய கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகள் போன்றவற்றுக்காக 4 குழுக்களை அதிமுக அமைத்து உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்காணிப்பில் செயல்பட உள்ள இந்த 4 குழுக்களும் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தேர்தல் அறிக்கையில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

The post அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: