தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் பிறந்தநாளையொட்டி சித்தூரில் பொதுமக்கள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

*மூத்த தலைவர் குரஜாலா ஜெகன்மோகன் வழங்கினார்

சித்தூர் : தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் பிறந்தநாளையொட்டி சித்தூர் தொகுதியில் பொதுமக்கள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் குரஜாலா ஜெகன்மோகன் வழங்கினார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் 41வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவரும், அறக்கட்டளை தலைவருமான குரஜாலா ஜெகன்மோகன் பட்டாசுகள் வெடித்து, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். இதைதொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் குரஜாலா ஜெகன்மோகன் பேசியதாவது: ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று மகப்பேறு வார்டில் உள்ள குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைகள் 190 பேருக்கு ஸ்ெவட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதேபோல் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 560 பேருக்கு பால், ரொட்டி, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதனையடுத்து சித்தூர் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் 122 முதியோர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.இதேபோல் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் 1600 பேருக்கு இலவசமாக தலை கவசங்கள், சாலையோர வியாபாரம் செய்யும் ஏழை, எளிய வியாபாரிகள் 550 பேருக்கு இலவசமாக தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.

இதேபோல் சித்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் 49,000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 25 வகையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கினோம். அதேபோல் சித்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் 50,000 குடும்பங்களுக்கு இலவச வேட்டிகள் சேலைகள், அனைத்து மக்களுக்கும் இலவசமாக குடைகள், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். முன்னாள் முதல்வர் சந்திரபாபு 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஆந்திர மாநில முதலமைச்சர் ஆக பதவி வகித்தார்.

அவருடைய ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார். அதேபோல் படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார். வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள், ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய முன் வந்தது. இதனால் வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
தற்போதுள்ள முதல்வர் ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் அனைத்தும் அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு சென்று விட்டது. இதற்கு முக்கிய காரணம் நிறுவனங்களிடம் ஆளும் கட்சியினர் பங்கு கேட்பதால் ஆந்திர மாநிலத்தை காலி செய்துவிட்டு அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டார்கள். இதனால் ஆந்திர மாநிலத்தில் படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் அவர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் மது பாட்டில்கள் விற்பனை, கொலை, கொள்ளை, எஸ்சி, எஸ்டி மைனாரிட்டி வகுப்பை சேர்ந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, செம்மரக்கட்டை கடத்தல், மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்டவை தான் ெஜகன்மோகன் ஆட்சியில் நடைபெற்று வருகிறது.ஆனால் முன்னாள் முதல்வர் ஆட்சியில் ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை. ஒரு அராஜகங்கள் கூட நடைபெறவில்லை.

இனியாவது ஆந்திர மாநில மக்கள் வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். மீண்டும் முதலமைச்சராக சந்திரபாபு பதவி ஏற்பார். ஆந்திர மாநில மக்களின் துன்பங்களை போக்குவார். இவ்வாறு அவர் பேசினார். இதில் தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் குரஜால சென்ன கேசவலு, தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்எல்சி துரைபாபு, முன்னாள் மேயர் கட்டாரி, ஹேமலதா தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் பொறுப்பாளர் சந்திர பிரகாஷ் உள்பட ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டி நாரா லோகேஷ் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினர்.

The post தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் பிறந்தநாளையொட்டி சித்தூரில் பொதுமக்கள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: