மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைதீர் முகாம்

பள்ளிபாளையம், ஜன.24: தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் அரசு சலுகைகள் பெறாத மாற்றுத்திறனாளிகள் 27ம் தேதி பள்ளிபாளையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தாசில்தார் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு உட்கோட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை வரும் 27ம் தேதி பள்ளிபாளையம் ஜிவி மகாலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் தெரிவித்துள்ளார். இம் முகாமில் மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கையினை மாவட்ட கலெக்டர் மேற்கொண்டுள்ளார். தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, அரசு உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், சுயதொழிலுக்கான வங்கி கடன்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுகிறது. இதனால் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம் என அவர் கூறியுள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: