இந்தியாவின் மிக மோசமான ஊழல்வாதி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா : ராகுல் காந்தி தாக்கு

அசாம்: இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணத்திற்கு எத்தனை தடைகள் விதித்தாலும் அவர்களை கண்டு அஞ்சப்போவதில்லை என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.ஜோராபாட் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேச ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கவுகாத்தி நகருக்குள் பயணம் செல்லவும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நீதிக்கான பயணத்திற்கு எதிராக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் பயணத்திற்கான விளம்பரமாகவே அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் அஞ்சாமல் தங்கள் பயணம் தொடரும் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவின் மிக மோசமான ஊழல்வாதியாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா உள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நீதிக்கான பயணத்தில் பங்கேற்க I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்த அவர், கூட்டணி கட்சிகள் பங்கேற்றால் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், “அசாம் முதலமைச்சர் மற்றம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகள் மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளன. தற்போது, அசாமின் முக்கிய விவாதப் பொருளாக நீதிக்கான பயணம் மாறியுள்ளது. இதுபோன்ற மிரட்டல் விடும் யுக்திகள் தான் பாஜகவின் பாணியாக உள்ளது. ஆனால், நீதிக்கான பயணத்தின் செய்தி மக்களை சென்றடைகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியாவின் மிக மோசமான ஊழல்வாதி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா : ராகுல் காந்தி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: