இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை

யோக்கியகர்த்தா:இந்தோனேஷியாவில் 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இதில் அதிக மக்கள் தொகை கொண்ட ஜாவா தீவின் யோக்கியகர்த்தா சிறப்பு மண்டலத்தில் 9,721 அடி உயரமுள்ள மொராபி எரிமலை சில தினங்களாக மிக ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் அது நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதிலிருந்து வௌியேறிய வெப்ப குழம்புகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

The post இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை appeared first on Dinakaran.

Related Stories: