தைவான் ஜலசந்தியில் சீனா ராணுவ பயிற்சி

பெய்ஜிங்: ஜப்பானுடனான பதற்றங்களுக்கு இடையே தைவான் ஜலசந்தியில் சீன ராணுவம் நேற்று மிகப்பெரிய அளவிலான பயிற்சியை தொடங்கியது. சீனா மற்றும் தைவான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகின்றது. ஆனால் தைவான் இதனை ஏற்க மறுத்து தனி நாடு என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது. தைவானை தனது பிராந்தியமாக கோரும் பெய்ஜிங் மற்றும் ஜப்பான் இடையே பதற்றம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று தைவானை சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சிகளை தொடங்கியது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் கிழக்கு கட்டளை பிரிவு, போர் விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி நீண்ட தூரராக்கெட் தாக்குதலுடன் ஒருங்கிணைந்து கடல் மற்றும் வான்வெளியில் ராணுவ பயிற்சிகளை சீனா மேற்கொள்கின்றது. தரையில் நகரும் இலக்குகளை தாக்குவதில் கவனம் செலுத்தும் இந்த பயிற்சிகள் முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தும் துருப்புக்களின் திறன்களை சோதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

Related Stories: