சேரங்கோடு ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துரிதம்

பந்தலூர்,ஜன.21: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட 5ம் வார்டு கொளப்பள்ளி குறிஞ்சிநகர்,மழவன்சேரம்பாடி, காவயல்,கோட்டப்பாடி, கருத்தாடு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த பகுதியில் வசித்துவரும் மக்களுக்கு கூடலூர் ஊராட்சி ஒன்றிய சேரங்கோடு ஊராட்சி சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு குழாய்கள் பதித்து குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சேரங்கோடு ஊராட்சி 5ம் வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்: இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.

The post சேரங்கோடு ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துரிதம் appeared first on Dinakaran.

Related Stories: