4 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் ரத்து

கிருஷ்ணகிரி, ஜன.20: பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 19 கிராம பஞ்சாயத்துகளுக்கு, இன்று (20ம்தேதி) முதல் 4 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிருஷ்ணகிரி பராமரிப்பு கோட்டத்தின் மூலம் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.48 கிருஷ்ணகிரி- வாலாஜா சேவை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக, நாளை (20ம்தேதி) முதல் 23ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒப்பதவாடி, சிகரலப்பள்ளி, பட்லப்பள்ளி, குட்டூர், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசீமனூர், பெருகோபனப்பள்ளி, தொகரப்பள்ளி, காட்டாகரம், மகாதேவகொல்லஅள்ளி, வலசகவுண்டனூர், வெப்பாலம்பட்டி, குள்ளம்பட்டி, போச்சம்பள்ளி, புளியம்பட்டி, பாலேதோட்டம், பாரண்டப்பள்ளி, ஜிங்கில்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 19 கிராம பஞ்சாயத்துகளுக்கு மட்டும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. எனவே, மேற்கண்ட 4 தினங்களுக்கு, உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post 4 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: