நீலகிரியில் இரு நாட்களாக பனி மூட்டம்: தாழ்வான பகுதிகளில் குளிர் அதிகரிப்பு

 

ஊட்டி,ஜன.20: நீலகிரியில் கடந்த இரு நாட்களாக பனி மூட்டம் காணப்படுவதால், பகல் நேரங்களிலேயே குளிர் அதிகமாக காணப்படுகிறது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு ேமலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் நீர்பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக உறைபனி விழத் துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் கடும் வெயிலும், இரவில் அதற்கு பனிப்பொழிவும் காணப்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளன.

மேலும், குளிரும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனி மூட்டம் காணப்படுகிறது. இந்த பனி மூட்டத்தால், அதிகாலை நேரங்களில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். மேலும், குளிர் அதிகமாக காணப்படுகிறது.

பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால், தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், தாழ்வான பகுதிகள், நீரோடைகள்,அணைகள் உள்ள பகுதிகளில் பகல் நேரங்களிலேயே குளிர் அதிகம் காணப்படும் நிலையில்,வெம்மை ஆடைகளை அணிந்தே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலம் வருகின்றனர். நேற்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவம், குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.

The post நீலகிரியில் இரு நாட்களாக பனி மூட்டம்: தாழ்வான பகுதிகளில் குளிர் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: