95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 120 ரன்னுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்தது. ஆஸி. பந்துவீச்சில் ஜோஷ் ஹசல்வுட் 14 ஓவரில் 6 மெய்டன் உள்பட 35 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஸ்டார்க், லயன் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
26 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. 6.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. கவாஜா 9 ரன் எடுத்து காயத்தால் வெளியேறினார். ஸ்மித் 11, லாபுஷேன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜன.25ல் பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
The post ஹேசல்வுட் வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் ஆஸி. அபார வெற்றி appeared first on Dinakaran.