கமுதி அருகே மழையால் கரிமூட்ட தொழில் பாதிப்பு

கமுதி, ஜன.19: கமுதி அருகே கோவிலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபட்டி கிராமம் முழுவதும் விவசாயம் மற்றும் கரிமூட்ட தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெல், சோளம், கம்பு, மிளகாய், பருத்தி போன்றவை பயிரிடப்பட்டு இருந்தது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து, விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.  இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தில் மனவேதனையுடன் இருந்து வருகின்றனர்.

மேலும் கரிமூட்ட தொழிலும் இப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கரிமூட்டைகள் மழையால் வீணாகியும், மழைநீரில் அடித்தும் செல்லப்பட்டன. இப்பகுதி விவசாயி துரைப்பாண்டி கூறும்போது,தொடர் மழையால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த இப்பகுதி விவசாயிகளுக்கு இந்த வருடம் பொங்கல் மகிழ்ச்சியானதாக இல்லை என்றும், விவசாயிகள் மன வேதனையுடன் உள்ளனர்.

எனவே இதற்கு தகுந்த நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் காட்டு பன்றியால் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் தொடர்ந்து சீரழிந்து வருவதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

The post கமுதி அருகே மழையால் கரிமூட்ட தொழில் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: