சிறப்பு பஸ்களால் சிரமமின்றி சொந்த ஊர் சென்று திரும்பிய மக்கள்

 

கோவை, ஜன. 19: கோவை கோட்ட தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை பஸ்கள் இயக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டம் வழியாக செல்லும் பஸ்கள், சூலூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாகச் செல்லும் பஸ்கள், காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாகச் செல்லும் பஸ்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டது.

இதில் கோவையில் இருந்து மதுரைக்கு 200, திருச்சிக்கு 200, தேனிக்கு 100, சேலத்துக்கு 250 என மொத்தம் 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும், அனைத்து பஸ் ஸ்டாண்டுகளுக்கும், காந்திபுரம், உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சிறப்பு பஸ்களால் பொதுமக்கள் பொங்கல் கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு சிரமம் இன்றி சென்று வந்தனர். பல ஆயிரம் பேர் சிறப்பு பஸ்களை பயன்படுத்தியுள்ளனர்.

The post சிறப்பு பஸ்களால் சிரமமின்றி சொந்த ஊர் சென்று திரும்பிய மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: