மலைக்கோவிலூர் அரசு பள்ளியில் 39 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

கரூர், ஜன. 19: மலைக்கோவிலூர் அரசு பள்ளியில் 39 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1985-1986ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் முன்னாள் மாணவர்களை இன்முகத்தோடு வரவேற்று தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தமது ஒற்றுமையைவெளிப்படுத்தினர். தொடர்ந்து மேடையில் முன்னாள் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

மேலும் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் தற்பொழுது அரசு வேலைகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்து வருகின்றனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அப்பள்ளியில் படித்த வகுப்பறைகள் மற்றும் விளையாடிய மைதானங்கள் ஆகிய இடங்களில் அமர்ந்து தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதேபோல் பள்ளியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். பழைய மாணவர்கள், குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 39 வருடங்களுக்கு பிறகு படித்த மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து சந்தித்த நிகழ்ச்சி
பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post மலைக்கோவிலூர் அரசு பள்ளியில் 39 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: