பொது விநியோக திட்ட குறைதீர் நாள் முகாம்

சேலம், ஜன.19: சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 20ம் தேதி (நாளை ) ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம். இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொது விநியோக திட்ட குறைதீர் நாள் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: