சேலம், ஆக.1: அரசாணைப்படி திருமணி முத்தாறு நீரை பங்கீடு செய்ய வலியுறுத்தி, சேலத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.நாமக்கல் மாவட்ட திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பரமத்திவேலூர் அதிமுக எம்எல்ஏ சேகர் தலைமையில் நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சரபங்கா வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் செயற்பொறியாளர் அப்புசாமியிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, பரமத்தி அருகே காவிரியில் கலக்கிறது. இடையில், ஆட்டையாம்பட்டி அடுத்த மதியம்பட்டியில் உள்ள தடுப்பணையில் இருந்து 2 ஆக பிரியும் கால்வாய், ஒருபுறம் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கான பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது.
