வங்கி கணக்கு தொடங்காததால் கைதிகள் அவதி

 

சேலம், ஆக.1: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு வங்கி கணக்கு தொடங்காததால் கைதிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சேலம் மத்திய சிறையில் 1400க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறையில் 3 நேரமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் டீ, மாலை நேரத்தில் வேர்கடலை வழங்கப்படுகிறது. மேலும் புதன், ஞாயிறு ஆகிய 2 நாட்கள் சிக்கன் குழம்பு வழங்கப்படுகிறது. இதையும் தாண்டி சிறைக்குள் கேண்டீன் மூலமாக டீ, வடை போன்றவை விற்பனை செய்யப்படும். இதனை கைதிகள் காசு கொடுத்து வாங்க வேண்டும். மேலும் குளிக்க குவளை, பக்கெட் போன்றவற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டும். முன்பெல்லாம் மணியார்டர் மூலமாக உறவினர்கள் பணத்தை அனுப்பி வைப்பர். அதனை அங்குள்ள நோட்டில் எழுதிவைக்கப்பட்டு பின்னர் டோக்கன் மூலமாக உணவு பொருட்களை வாங்கிக்கொள்வர்.

Related Stories: