கொள்ளிடம் அருகே சாலையை ஆக்கிரமித்திருந்த செடி, கொடிகள் அகற்றம்


கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் இருந்து சந்தப்படுகை கிராமத்துக்கு செல்லும் ஒரு கிமீ தூர சாலை உள்ளது. இந்த சாலை தொடர்ந்து திட்டுபடுகை, நாதல்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்கிறது. இது கொள்ளிடம் ஆற்றின் வலதுகரை சாலையாகவும் இருந்து வருகிறது. இந்த சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர் செடிகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.

இதைதொடர்ந்து சந்தப்படுகை கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து சாலையோரம் இடையூறாக முள்செடிகளை அகற்ற முடிவு செய்தனர். அதன்பேரில் நேற்று மக்கள் ஒன்று திரண்டு 500 மீட்டர் தூரத்துக்கு மண்டியிருந்த கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றினர்.

The post கொள்ளிடம் அருகே சாலையை ஆக்கிரமித்திருந்த செடி, கொடிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: