பூ தாண்டுதல் போட்டி

சேந்தமங்கலம், ஜன.18: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதன்சந்தை அருகே நடந்த பூ தாண்டுதல் போட்டியில் ஏராளமான காளைகள் பங்கேற்றன. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்துள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி கொண்டப்பநாயக்கனூரில் பிரசித்தி பெற்ற மாலா கோயில் உள்ளது. தை மாதம் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, இந்த கோயிலில் மாடுகள் பூ தாண்டுதல் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதில் மஞ்சநாயக்கனூர், அல்லாதபுரம், திருமலைப்பட்டி, எருமை நாயக்கனூர், நாகம்மா நாயக்கனூர், பெரியதொட்டிபட்டி, சின்னதொட்டிப்பட்டி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, காளைகளை ஊர்க்காரர்கள் கொண்டு வந்திருந்தனர். முன்னதாக மாலா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூ தாண்டுதல் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு ஊர் பட்டயக்காரர் அண்ணா துரை தலைமை வகித்து, மஞ்சுவிரட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் 20க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அரசு தொடக்கப்பள்ளி முன்பு காளைகளை அவிழ்த்து விட்டனர். 10 சுற்றுகள் விடப்பட்டது. பூ தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்ற எருமைநாயக்கனூர் காளைக்கு, முன்னாள் அட்மா குழு தலைவர் பிரபாகரன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

The post பூ தாண்டுதல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: