ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து கர்நாடக லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்

பெங்களூரு: லாரி ஓட்டுநர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடுவது தொடர்பான ’ஹிட் அண்ட் ரன்’ சட்டத்தை ஒன்றிய அரசு கடுமையாக்குவதை எதிர்த்து பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. கர்நாடகாவிலும் லாரி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் ஜனவரி 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது.

அந்தவகையில், கர்நாடகாவிலும் நேற்று நள்ளிரவு முதல் லாரி ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.நவீன் ரெட்டி, பெரியசாமி ஆகியோர் தலைமையிலான கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஹிட் அண்ட் ரன் வழக்குகளுக்கு எதிரான புதிய சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் லாரி ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நள்ளிரவு 12 மணி முதல் இந்த வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் லாரிகள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

The post ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து கர்நாடக லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: