வள்ளுவனின் புகழ் தழைத்தோங்க சான்றாவோம்: எல்.முருகன்

சென்னை: வள்ளுவனின் புகழ் தழைத்தோங்க சான்றாவோம் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மொழி, இனம், தேசம் மற்றும் மக்களின் கலாச்சாரங்கள் கடந்து, உலக மக்கள் அனைவருக்குமான பொதுமறையாம் “திருக்குறள்.” இரண்டடி எழுசீரில் மனித சமுதாயத்தை சுருக்கி எழுதிய “தெய்வப்புலவர் அய்யன் திருவள்ளுவர்” தினம் இன்று. உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், வள்ளுவனின் புகழை வானளவு உயர்த்தும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சீரிய முயற்சியால், பிரான்ஸ் செர்ஜி நகரில் அய்யன் திருவள்ளுவரின் “திருவுருவச் சிலை” சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சந்ததிகளுக்கு நாம் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷமான திருக்குறளை, அதன் பொருளறிந்து கடைபிடிக்கும்படி வழிகாட்டுவோம். வள்ளுவனின் புகழ் தழைத்தோங்க சான்றாவோம் இவ்வாறு கூறினார்.

The post வள்ளுவனின் புகழ் தழைத்தோங்க சான்றாவோம்: எல்.முருகன் appeared first on Dinakaran.

Related Stories: