உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!..

பாலமேடு: உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு வீரர்கள் உறுதியேற்புடன் தொடங்கியது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். காளைகள் மற்றும் மாடிபிடி வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் களத்தில் இறங்க அனுமதிக்கப்படுவர்.வீரர்கள் உறுதிமொழி ஏற்றதை அடுத்து அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் கோவில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, வாடிவாசல், பார்வையாளர் மாடத்தில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாலமேடு ஜல்லிக்கட்டு: முதல் சுற்றில் 50 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

The post உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!.. appeared first on Dinakaran.

Related Stories: