குடந்தை எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

 

கும்பகோணம், ஜன.14: கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் அனைத்து சமுதாயத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பல்வேறு பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கரும்பு, வாழைப்பழங்கள், பழவகைகள் வைத்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது, பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேலும், எம்எல்ஏ அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து, 1000 பெண்களுக்கு புடவைகளையும், 300 ஆண்களுக்கு வேஷ்டி மற்றும் துண்டுகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநகர செயலாளர் தமிழழகன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கணேசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்துசெல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழுத் தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, மாநகர, பேரூர் நிர்வாகிகள், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், பகுதி செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post குடந்தை எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: