தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா: வெளிநாட்டு அறிஞர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், ஜன.14: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், வெளிநாட்டு அறிஞர்கள் பங்கேற்றனர். மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் தனலட்சுமி கலை அறிவியல் கல்லூரி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பி.மணி, அறங்காவலர் மருத்துவர் கனிஷ்கா ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கினர். பொறியியல் கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மதன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், எவிலினா (இங்கிலாந்து) மற்றும் ஷெரின் (பெல்ஜியம்) ஆகிய வெளிநாட்டு அறிஞர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஆடல், பாடல்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு துறை சார்பாக ஆரம்பிக்கப்பட்டு, பல பொருட்கள் மற்றும் உணவுகளை மாணவர்கள் விற்பனை செய்தனர்.

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா: வெளிநாட்டு அறிஞர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: