திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 20ம் தேதி சேலம் செல்கிறார்: பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்


சேலம்: திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 20ம் தேதி சேலம் செல்கிறார். இதையொட்டி 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, சேலம் அருகேயுள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து, தற்போது இறுதி கட்ட பணிகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதற்காக 20ம் தேதி மாலை விமானம் மூலம் சேலம் வரும் முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அன்று மாலையில் டூவீலர் பேரணி, ஆயிரம் டிரோன்களில் லைட்டிங்ஷோ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வரின் வருகையையொட்டி, மாநாடு நடக்கும் பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் 4 டிஜிக்கள், 20 எஸ்பிக்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

The post திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 20ம் தேதி சேலம் செல்கிறார்: பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: