பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம் : பொதுமக்கள் உற்சாகம்; குவியும் சுற்றுலா பயணிகள்

கோவை : 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் இன்று தொடங்கியது.தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொள்ளாச்சியில் வருடா வருடம் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் போது வெவ்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யலாம். மேலும், பொள்ளாச்சி மாவட்டத்தின் ஒட்டுமொத்த அழகையும் கண்டுகளிக்கலாம். இந்த பலூன் திருவிழாவானது இந்தியாவிலேயே கோவை அருகே பொள்ளாச்சியில் மட்டும் தான் நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பு.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று காலை தொடங்கியது. இந்த முறை பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி உள்ள நிலையில் வரும் ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 10 பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த பலூன்களின் சராசரி உயரம் 60 அடி முதல் 100 அடி வரை உள்ளது. கு யானை, வாத்து, தவளை உருவங்களை கொண்ட குழந்தைகளை கவரும் பலூன்கள் இந்த முறை வந்துள்ளன. இதை இயக்குவதற்கு ஒரு பெண் விமானி உள்பட விமானிகள் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார்கள். இதில் சிறப்பு அம்சமாக ஹெலிகாப்டரில் பறந்து பொள்ளாச்சியின் இயற்கை அழகை ரசிக்கலாம்.

The post பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம் : பொதுமக்கள் உற்சாகம்; குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: