புகையில்லா போகி கொண்டாட மாசு கட்டுப்பாடு வாரியம் மக்களுக்கு வேண்டுகோள்

சென்னை: ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் எரிக்க கூடாது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கை: போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், துணிகள், ரப்பர், டயர், டியூப், காகிதம், ரசாயன பொருட்களைஎரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன.

புகையால் மூச்சுதிணறல், கண் எரிச்சலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

The post புகையில்லா போகி கொண்டாட மாசு கட்டுப்பாடு வாரியம் மக்களுக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: