புதிய பிரமாண்ட மைதானத்தில் 5 நாட்கள் தொடர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை: புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் 5 நாட்களுக்கு தொடர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்து உள்ளார். மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக 12,176 காளைகளும், 4,514 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டில் சிறந்த காளைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக கொடுக்கப்படும். சிறந்த வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் கொடுக்கப்படும். அன்புமணி ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தால் அதனை சிறந்த வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அவர் பெயரிலேயே வழங்குவதற்கு தயார். அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிய பிரமாண்ட ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்த வைத்த தினத்தில் இருந்து தொடர்ந்து 5 நாட்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post புதிய பிரமாண்ட மைதானத்தில் 5 நாட்கள் தொடர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: