பெரம்பூர் கேரேஜ் பனிமனை முன் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரதம்: பிப். 16ம் தேதி நாடு தழுவிய போராட்டம்

பெரம்பூர், ஜன. 11: பெரம்பூர் கேரேஜ் பணிமனை முன் ரயில்வே ஊழியர்கள் 3வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பணிமனை கோட்டம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி 4 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி, பெரம்பூர் கேரேஜ் பணிமனை முன் நேற்று காலை சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீண்டும் ரயில்வே துறையில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில், சதன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் தென் மண்டல தலைவர் ராஜா தர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவில் உள்ள எல்லா மைய தொழிற்சங்கங்களும் பல்வேறு கோரிக்கைகளுக்காக அடுத்த மாதம் 16ம் தேதி நாடு தழுவிய போராட்டம், அதாவது ஒருநாள் வேலை நிறுத்தம் என்ற முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகளும் தொழிலாளர்களும் சேர்ந்து நடத்துகின்ற போராட்டமாக இது இருக்கும். ஒன்றிய மோடி அரசை எதிர்த்து ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் நேரடி போராட்டங்களை நடத்துவது என்ற உறுதி மொழியை எடுத்துள்ளோம்’’ என்றார்.

The post பெரம்பூர் கேரேஜ் பனிமனை முன் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரதம்: பிப். 16ம் தேதி நாடு தழுவிய போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: