இலக்கை நோக்கி பயணிக்கும் இந்தியா!: அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம்.. குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!!

காந்திநகர்: அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அமிர்த காலம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காந்திநகரில் நடைபெற்ற துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாட்டின் 10வது பதிப்பை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். சர்வதேச அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்த வரிசையில் துடிப்பான குஜராத் என்ற பெயரிலான முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேரில் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை அண்மையில் கொண்டாடினோம். தற்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து இந்தியா முன்னேறி வருகிறது. இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் போது இந்தியா வளர்ந்த நாடாக மாறியிருக்கும் என்றும் தெரிவித்தார். எனவே அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அமர்த்தகாலமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள என்று மோடி குறிப்பிட்டார். மோடியின் வெற்றிக் கதையில் இந்த உச்சிமாநாடு முக்கியப் பங்காற்றியுள்ளது.

துடிப்பான குஜராத் மாநாட்டில் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுவாக மாநிலங்களில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடுகளை மாநில அரசுகளே முன்னின்று நடத்தும் நிலையில், குஜராத் மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியே முன்னிறுத்துவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. துடிப்பான குஜராத் மாநாட்டால் மாநிலத்திற்கு எந்த பலனும் இல்லை என்றும் பிரதமர் மோடியின் பிம்பத்தை நிலைநிறுத்துவதற்காகவே நடத்தப்படுவதாகவும் அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

The post இலக்கை நோக்கி பயணிக்கும் இந்தியா!: அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம்.. குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!! appeared first on Dinakaran.

Related Stories: