அர்ஜூனா விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் கேன்டிடேட் போட்டியில் பங்கேற்கவுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோருக்கும் அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 4 பேருக்கும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகள், குடியரசுத் தலைவரால் டெல்லியில் வழங்கப்பட்டன. 4 பேரும் விளையாட்டுத் துறையில் இன்னும் பல உயரங்களை தொட என்னுடைய வாழ்த்துகள் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுத்தோறும் அர்ஜூனா விருது, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான் சந்த் ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான விருதுப்பட்டியலை சமீபத்தில் ஒன்றிய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (9.01.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதை வழங்கி கவுரவித்தார்.

அவரது பயிற்சியாளரான தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருது வாங்கிய அதே மேடையிலே அதே ஆண்டு மாணவியான வைஷாலியும் விருது பெற்றுள்ளார். தொடர்ந்து சிறந்த பணியை வெளிப்படுத்தியதற்காகவும், சர்வதேச போட்டிகளில் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்து விளங்க பயிற்சியளித்த பயிற்சியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

The post அர்ஜூனா விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: