தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம்

மோகனூர், ஜன.10: மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மோகனூர் வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி ்அலுவலர் மல்லிகா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மறறும் உறவினர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து பெற்று சென்றனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: ரத்த அழுத்தம், சர்க்கரை, எடை, உயரம் கணக்கிட்டு உடலுக்கேற்ற சிகிச்சை முறை மேற்கொள்வது ஆலோசனை பெற, இந்த முகாம் நடத்தப்படுகிறது. தொழிலாளர்கள் முகாமை பயன்படுத்தி உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். துரித உணவை தவிர்த்து, இயற்கையான உணவை உட்கொள்ள வேண்டும். நடைபயிற்சி , உடற்பயிற்சிகளை மேற்கொண்டு நோய் பாதிப்பின்றி இருக்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில்தொற்றா நோய் பிரிவு மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் விஜயராகவன், சர்க்கரை ஆலை தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், அலுவலக மேலாளர் செல்வகணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: