ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : பாஜக அமைச்சர் தோல்வி.. காங்கிரஸ் வெற்றி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி வெற்றி பெற்றது. ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 199 தொகுதிகளில் கடந்த நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கட்சி 115 இடங்களில் வென்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து கரண்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் ஜன.5ல் நடந்தது. ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30ம் தேதி இணை அமைச்சராக பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜ வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் நிறுத்தப்பட்டார். இங்கு 81.38 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங். வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக முதல்வர் பஜன் லால் சர்மா சில நாட்களுக்கு முன்பு, சுரேந்திர பால் சிங்கை கேபினட் அமைச்சராக நியமித்து அவருக்கு 4 இலாக்காக்களை ஒதுக்கினார். இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.

The post ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : பாஜக அமைச்சர் தோல்வி.. காங்கிரஸ் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: