கிண்டல் செய்வதற்கு முன் சுயபரிசோதனை செய்ய வேண்டும்: அகிலேஷுக்கு மாயாவதி குட்டு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் மாயாவதி தனது எக்ஸ் பதிவில், ‘‘அகிலேஷின் தலித் விரோத கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக ஆதரவற்ற நிலையில் இருக்கும் சமாஜ்வாடி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி குறித்து எந்தவொரு கட்டுப்பாடற்ற கருத்தையும் வெளியிடுவதற்கு முன்பு சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

பாஜ.வை வலுப்படுத்துவதிலும் அவர்களுடன் சமரசம் செய்வதிலும் அவரது நற்பெயருக்கு எவ்வளவு களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும் சரிபார்க்க வேண்டும். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னும் பின்னும் பாஜ.வுக்கு அப்போதைய சமாஜ்வாடி தலைவர் அளித்த ஆசீர்வாதங்களை யாரால் மறக்க முடியும்? பின்னர் சமாஜ்வாடி தலைமை பாஜ. தலைமையுடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த பிறகு நடத்திய சந்திப்புகளை மக்கள் எப்படி மறக்க முடியும்? இத்தகைய சூழ்நிலையில், சமாஜ்வாடி மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவது பொருத்தமாக இருக்கும்” என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

* விரைவில் முடிவு?
இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து அகிலேஷ் கூறுகையில், ‘’ சமாஜ்வாடி மற்றும் பிற கட்சிகளை ஒருங்கிணைத்து விரைவில் முடிவு எடுக்கப்படும். பொங்கல் முடிந்தவுடன் முடிவு எடுக்கப்பட உள்ளது. கூட்டணியில் யாருக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல் விரைவில் வழங்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

The post கிண்டல் செய்வதற்கு முன் சுயபரிசோதனை செய்ய வேண்டும்: அகிலேஷுக்கு மாயாவதி குட்டு appeared first on Dinakaran.

Related Stories: