புதுக்கோட்டையில் 4 ஏக்கர் இடத்தில் 38 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் சகோதரர்கள்; பராமரிப்புக்கு மட்டும் மாதம் ரூ.2 லட்சம் செலவு..!!

புதுக்கோட்டை: தற்போதைய காலகட்டத்தில் தீவனங்களின் விலை உயர்வால் ஓரிரு ஜல்லிக்கட்டு காளைகளை வைத்துள்ளவர்களே அதிக காளைகளை வளர்ப்பதற்கு சிரமப்பட்டு வரக்கூடிய நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள மங்கதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான கணேஷ் மற்றும் கருப்பையை ஆகிய இருவர், 38 காளைகளை பராமரித்து வருகின்றனர். 4 ஏக்கர் நிலத்தில் நீச்சல் குளம், மின்விசிறி, சிசிடிவி உள்ளிட்ட வசதிகளுடன் காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் எந்த பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தாலும், அங்கு மங்கதேவன் கணேஷ், கருப்பையா என்ற பெயரில் தங்களது காளைகள் களமிறங்கும் என கூறும் அதன் உரிமையாளர்கள், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற பரிசுப் பொருட்களை இரண்டு அறைகளில் குவித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 9 வகைகளை சேர்ந்த நாட்டின காளைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வகையான காளைக்கும் ஒரு குணம் இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. காளைகள் பயிற்சி, பராமரிப்புக்கு என மாதம் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றால் தான் நாட்டு காளைகளை அழிவில் இருந்து மீட்க முடியும் என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post புதுக்கோட்டையில் 4 ஏக்கர் இடத்தில் 38 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் சகோதரர்கள்; பராமரிப்புக்கு மட்டும் மாதம் ரூ.2 லட்சம் செலவு..!! appeared first on Dinakaran.

Related Stories: