திருச்சி புதிய முனையத்தின் சிறப்பு அம்சங்கள்
*60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டு புதிய விமான முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.
*திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரலாம்.
*புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தில் 750 கார்கள், 200 டாக்சிகள், 10 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.
*புறப்பாடு, வருகை என 16 வழிகள் உள்ளன; 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க நவீன கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
*4 நட்சத்திர புள்ளிகள் பெற்ற முதல் இந்திய விமானநிலைய முனையம் இதுவாகும்.
*புதிய முனையத்தில் கழிவுநீரை வெளியேற்றாமல் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
*பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநுட்பங்கள் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*உள்நாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 3 எக்ஸ்ரே இயந்திரங்கள், வௌிநாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட 4 எக்ஸ்ரே இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
*பயணிகளின் உடைமைகளை விமானத்தில் இருந்து கொண்டு வரவும், விமானத்திற்கு கொண்டு செல்லவும் 6 கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
*பயணிகளின் குடியேற்ற சோதனைக்கு 58 கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது.
The post ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரக்கூடிய திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.