திருப்பூர் மாவட்டத்தில் 464 கிலோ புகையிலை பொருளுடன் 3 பேர் கைது

 

திருப்பூர், ஜன.1: திருப்பூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக போதை பொருட்கள் பிடிபட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு ரோட்டரி மின்மயானம் அருகே 2 பேர் சந்தேகத்துக்கிடமாக வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் அவர்கள் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த கெவில்பட்டேல் (24), சந்திரசேகர் (54) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்து 273 கிலோ 800 கிராம் புகையிலை பொருட்களை வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல அங்கேரிபாளையத்தில் நடந்த சோதனையில் வெங்கமேடு பகுதியை சேர்ந்த வேல்ராஜ் (28) என்பவரை கைது செய்து 190 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post திருப்பூர் மாவட்டத்தில் 464 கிலோ புகையிலை பொருளுடன் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: