மல்லப்பாடி வீதிகளில் சிசிடிவி கேமராக்கள்

 

கிருஷ்ணகிரி, டிச.31: பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், வீதிகளில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களை, டிஎஸ்பி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பர்கூர் அடுத்துள்ள மல்லப்பாடி பஞ்சாயத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை சார்பில், முக்கிய வீதிகளில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், ‘கடந்த 2022ம் ஆண்டு அறக்கட்டளை துவங்கி, துணை சுகாதார நிலையம் புனரமைப்பு, ஆஞ்சநேயர் கோயில் கிணறு சுற்றுச்சுவர் கட்டி, கிரில் கேட் அமைத்தது, மல்லப்பாடி ஏரி, கால்வாயை 3.5 கி.மீ., தூர்வாரியது போன்ற பல்வேறு பணிகளை செய்துள்ளோம்.

மல்லப்பாடியில் அடிக்கடி விபத்துக்களும், திருட்டு சம்பவங்களும் அதிகரித்தன. இதை கட்டுப்படுத்தும் வகையில் பர்கூர் போலீசார் 6 ‘சிசிடிவி’ கேமராக்கள், அறக்கட்டளை சார்பில் 3 ‘சிசிடிவி’ கேமராக்களை ₹2 லட்சம் செலவில் அமைத்துள்ளோம். இதை பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழங்கவே இச்சேவை துவங்கப்பட்டுள்ளது,’ என்றனர். இந்நிகழ்ச்சியில், பர்கூர் ஒன்றியக்குழு தலைவர் கவிதா, காரகுப்பம் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராசன், மல்லப்பாடி மக்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் குமரவேல், செயலாளர் இளையபாரதி, கதிரவன், பெருமாள், அரும்பு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post மல்லப்பாடி வீதிகளில் சிசிடிவி கேமராக்கள் appeared first on Dinakaran.

Related Stories: